TNPSC போட்டித் தேர்வுகள் - 2022 !!
பொதுத்தமிழ் - இலக்கியம்
சூளாமணி...!
General Tamil - Literature
Potuttamil- ilakkiyam-coolamani
★ ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சுசூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
🌷 சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார்.
🌷 பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சு+ளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
🌷 எனவே, இந்நூலின் காலம் கி.பி.10-ஆம் நு}ற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம்.
🌷 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நு}லில் உள்ளன.
🌷 ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நு}லைத் தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல்.
🌷 இந்நு}ல் விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது.
🌷 தோலாமொழித்தேவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்து வந்துள்ளார்.
🌷 மைசு+ர் மாநிலத்தில் உள்ள சிரவணபெலகோலாக் கல்வெட்டு தோலாமொழித்தேவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
🌷 இக்கதை சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன் என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச் செயல்களையும் கூறுகிறது.
🌷 இந்தப் பின்னணியில் இதன் ஆசிரியர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார்.
🌷 இந்நு}ல் சமணத் தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது.
0 Comments